கிறிஸ்துவுக்குள் அன்பான மாணவச்செல்வங்களே,
உங்கள் அனைவரையும் நமது செமினரிக்கு வாழ்த்தி வரவேற்கிறோம்.
உங்களுடைய இறையியல் படிப்பிற்க்கும், ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் எங்களை தேர்ந்தெடுத்ததற்காக மிக்க நன்றி!
இத்துடன் நம்முடைய சீயோன் வேதாகம இறையியல் கல்லூரியின் பாடத்திட்டம் அனுப்பப்பட்டுள்ளது. அநேக பாடங்களிலிருந்தாலும் ஆவிக்குரிய வாழ்விற்கும், வேத அறிவிற்கும் மிகவும் பிரயோஜனமான பாடங்களை நாம் பயில இருக்கிறோம். ஆன்லைனில் படிக்கிற உங்கள் சூழ்நிலைகளை நாங்கள் கருத்தில் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு ஒருவேளை இறையியல் படிப்பிற்காக நூலக [Library] வசதியோ, இறையியல் புத்தகங்களை வாங்கி படிக்கவோ, நாள் முழுவதும் வகுப்பில் இருந்து படிக்கும் வாய்ப்போ இல்லாதிருக்கிறது. இது புதியதொரு பாடபடிப்பாக கூட உங்களுக்கு இருக்கலாம். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டவர்களாகவே நாங்கள் இறையியல் பாடங்களை அதன் கருத்து மாறாமல் மிகவும் எளிமைப்படுத்தி தருகிறோம்.
ஆறு மாதத்திற்கு ஒருமுறை பருவத்தேர்வு நடைபெறும். அதில் 5 பாடபுத்தகங்களில் [ Subjects] 4 பாடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. 1 பாடப்புத்தகம் துணைப்பாடம் தான். அதற்கு தேர்வு இல்லை. அதற்கு பாட குறிப்புகளையும் நாம் தருவதில்லை. அதில் நீங்கள் கட்டுரை வடிவில் கேட்கப்படும் சில கேள்விகளுக்கு பதில் எழுதி அனுப்பினால் போதும்.
இந்த 5 பாடப்புத்தகங்களையும் தவிர ஆவிக்குரிய வளர்ச்சி, நடைமுறை ஊழிய பயிற்சிகள் மற்றும் இறையியல் அடிப்படையிலான பிரசங்கங்கள், வேதாகமத்தை முற்றிலும் ஆழமாக விளங்கிகொள்ளவும் கற்றுத்தர இருக்கிறோம். ஆக இறையியலை மட்டுமல்ல வேதத்தையும் கற்றுதருவோம். இது மற்ற எந்த இறையியல் கல்லூரியிலும் இல்லாத நம்முடைய ஒரு சிறப்பு தன்மை.
எழுத்துத்தேர்வு 60 மதிப்பெண்களுக்கு நடைபெறும். ஆய்வுக்கட்டுரைக்கு 30 மதிப்பெண்கள் மற்றும் நீங்கள் இந்த படிப்பில் காட்டும் ஈடுபாடு, கிரமமான பதில் போன்றவற்றிற்கும் 10 மதிப்பெண்களும் தரப்படும். ஆக, நீங்கள் இந்த படிப்பில் மிகவும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறுவது எளிது.
நீங்கள் செய்ய வேண்டியவை:
- பாடத்தை ஆடியோவில் கேட்டு குறிப்பு எடுப்பதற்கும், பதில்களை எழுதிக்கொள்ளவும் நோட்புக் ஒன்று போட்டுகொள்ளுங்கள்.
- தினமும் உங்களுக்கு வசதியான ஒரு மணி நேரத்தை இதற்கென ஒதுக்கி கொள்ள அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
- பாடத்தை கேட்கும் போது நம் பாடப்புத்தகத்தையும் கையில் வைத்துகொள்ளுங்கள். புரிந்துகொண்டால் போதும். தனியாக பரீட்சைக்காக படிக்கதேவையில்லை.
- நாங்கள் உங்களுக்கு பரீட்சைக்காகவோ, பட்டத்திற்காகவோ மட்டும் இந்த படிப்பை நடத்தாமல் ஊழிய நோக்கத்தோடு செய்வதால் சிறந்த தரமான வகையில் அனைத்தையும் செய்கிறோம். முழுநேரமாக [Regular] கல்லூரியில் படிப்பதற்க்கிணையாக தரமாக கற்றுத்தர முயற்சிக்கின்ற எங்களோடு நீங்கள் முழு ஒத்துழைப்பை தந்தால் போதும். இந்த படிப்பின் முடிவில் ஒரு சிறந்த விசுவாசியாக, சிறந்த கனியுள்ள ஊழியராக உருவாகுவது உறுதி.
உங்களை கர்த்தரின் உதவியோடு நாங்கள் உருவாக்குகிறோம். இது நிச்சயம்!