ஆன்லைன் வகுப்புகள்
ONLINE COURSES
நம்முடைய பாடங்கள் நம் வெப்சைட்டில் போடப்படும். மேலும், வாட்ஸ்அப் வழியாக யூடியூப் லிங்க் அனுப்பி வைக்கப்படும். இவையெல்லாம் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி அட்மி~ன் போட்டவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் நம் செமினரியின் விதிமுறையை மீறிச்சென்றாலோ அல்லது உரிய கட்டணத்தை செலுத்தாமிலிருந்தாலோ பாடங்களைப் பெற இயலாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பாடக்குறிப்புகள் உங்கள் இமெயிலில் PDFல் அனுப்பி வைக்கப்படும். ஆன்லைனில் படித்துக் கொள்ளலாம். அல்லது நீங்கள் பிரிண்ட் செய்து கொண்டு கோர்த்து படிப்பது சிறந்தது.
தேர்வுகள் நடைபெறும் விதம்
ஆறுமாதத்திற்கு ஒருமுறை பருவத்தேர்வு நடத்தப்படும். இத்தேர்வை உங்கள் ஊரிலேயே) எழுதலாம். நீங்கள் உங்கள் ஆவிக்குரியத்தலைவர்/பாஸ்டர்/குருவானவர்/ஊழியர்/ஆவிக்குரிய வாழ்வில் நடத்தியவர்கள் பெயரையுமஇ இமெயில் விலாசத்தையும் தரவேண்டும். அவர்களுக்கு கேள்வித்தாள் அனுப்பி வைக்கப்படும். அவர் தலைமையில் நாங்கள் குறிப்பிடும் தேதியில் பரீட்சை எழுதி, அந்த விடைத்தாளை தபாலில்/இமெயிலில் அனுப்பி வைக்கலாம். அனுப்ப வேண்டிய இமெயில்: zisoexam2018@gmail.com
நம் செமினரியின் விண்ணப்பப் படிவத்தை நீங்கள் எங்களிடம் ஆன்லைனில் பெற்று பதிவிறக்கம் (Download) செய்து அதை நிரப்பி தபால் மூலம் அனுப்பலாம் அல்லது இமெயில் வழியாக அனுப்பலாம். இமெயில்: ziontheology@gmail.com
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியவை:
ஆன்லைனில் அனுப்பும்போது உங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் போட்டோவையும், விண்ணப்ப படிவத்தையும், சான்றிதழ்களையும் ஸ்கேன் நகல் எடுத்து இமெயிலில் அனுப்பவும். தபாலில் அனுப்பும் போது இதன் நகல்களை விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
நீங்கள் விண்ணப்பிக்கும் போது அட்மின் கட்டணம் ரூ.500ஐ சேர்த்து கட்டி அதன் நகலை எங்களுக்கு போட்டோ எடுத்து அல்லது இணைத்து அனுப்பவும். இதற்கு பின்னரே உங்கள் அட்மின் பணி நிறைவுபெறும்.
பாட சந்தேகங்கள்
உங்களுக்கு நம் பாடத்தில் எழும் சந்தேகங்களுக்கு பதிலளிக்க நாங்கள் ஆயுத்தமாயிருக்கிறோம். உங்கள் சந்தேகங்களை அனுப்ப வேண்டிய இமெயில் முகவரி: zisclarify2018@gmail.com
உங்களுக்கு வெகு விரைவில் இமெயில் /வாட்ஸ்அப் /தொலைப்பேசி வழியாக வரிசையின் அடிப்படையில் பதில் அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
HOW TO APPLY ?
கட்டண விவரம்
பட்டமளிப்பு
tABLE TO BE ADDED
எல்லா வகுப்பிற்கும் அட்மி~ன் தொகை ரூ.500/- ஒரு வருடத்திற்கான தொகையை மொத்தமாக செலுத்துவோருக்கு சிறப்பு சலுகை உண்டு
Dip.Th படிப்பிற்கு ஒராண்டு முடிவிலும், டீ.வுh படிப்பிற்கு மூன்றாண்டு நிறைவிலும், M.Div படிப்பிற்கு இரண்டாமாண்டு முடிவிலும் பட்டமளிப்பு விழா நடத்தப்படும். நான்கு மாவட்டங்களுக்கு ஒரு இடத்தில் அல்லது தமிழகத்தின் மூன்று முக்கிய நகரங்களில் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, இந்த விழா நடத்தப்படும். இந்த விழாவின் செலவினங்களுக்கென ரூ.1500/- கட்டணமாக வசூலிக்கப்படும். Dip.Th பட்டமளிப்பிற்கு ரூ.1000/- வசூலிக்கப்படும். (இதில் ஹால் வாடகை, உணவு, பட்டமளிப்புக்கான உடை போன்றச் செலவுகள் அடங்கும்)
B.Th & M.Div சேர்த்து படிக்கும் வாய்ப்பு
அரசு பல்கலைக்கழக பட்டப்படிப்பு படித்து முடித்தவர்கள் நேரடியாக M.Div சேரலாம். அதற்கு அவர்கள் தகுதியானவர்கள். இப்படிப்பட்டவர்கள் இறையியலை அடிப்படையிலிருந்து படித்து M.Div பாடங்களை புரிந்து கொள்வதற்காக B.Th யும் சேர்த்து படிக்கும் Fast Track படிப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் ஒருசேர இரண்டு பட்டங்களையும் படிக்கலாம். B.Th படிப்பிற்கு இவர்கள் தேர்வு எழுத தேவையில்லை. இரண்டு பட்டப் படிப்பிற்குரிய கட்டணங்களையும் சேர்த்து செலுத்த வேண்டியதாயிருக்கும். இரண்டாமாண்டில் M.Div பட்டத்தையும், மூன்றாமாண்டில் B.Th பட்டத்தையும் பெற்றுக்கொள்ள இயலும்.
B.Th & M.Div
சேர்த்து படிக்கும் வாய்ப்பு
HELP DESK
உதவி மையம்
நம்முடைய ஆன்லைன் படிப்பு சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேகங்களையும், நிவர்த்தி செய்யவும், வழிகாட்டவும், ஆவிக்குரிய வாழ்வில் ஜெபித்து ஆலோசனைத் தரவும் நாங்கள் எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறோம்.
தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:
Registrar : 9788140609
Additional Director : 9788140609
Dean : 9500440776
Co-Ordinator : 9159381012