SEMINARY

தேவன் கொடுத்த ஊழியத்தின் திட்டப்படி 30 ஆண்டுகளாக மக்களை விடுவிக்கும் ஊழியத்தையும், கிராம ஊழியத்தையும் சிறப்பாக செய்து வரும் சீயோன் சுவிசேஷ ஜெப ஐக்கியத்தால் 2009ம் ஆண்டில் இந்த வேதாகம கல்லூரி கர்த்தருடைய கிருபையால் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஊழியத்திற்கு சிறந்த தலைவர்களை உருவாக்க வேண்டுவதின் தேவையை உணர்ந்த நம் ஊழியத்தலைவர்களின் பாரம் NATA வில் உறுப்பினரானதின் மூலமும், Good News International University யில் Affiliation பெற்றதினாலும் நிறைவேறிற்று. இந்த இயக்கங்களின் பாடத்திட்டத்தின்படியும், வழிகாட்டுதலின்படியும் பாடத்திட்டங்கள் நடத்தப்பெற்று பட்டங்கள் (Degrees) வழங்கப்படுகிறது. அவை ஊழிய, மிஷனெரி இயக்கங்களில் மதிப்பையும், அங்கீகாரத்தையும் பெற்றுள்ளபடியால் நம்மிடம் படித்தவர்கள் சிறந்த இயக்கங்களில் ஊழியர்களாக இணைந்து தேவ சித்தத்தை சிறப்பாக நிறைவேற்றுகிறார்கள் .

தரிசனம்

Vision

இறையியலை வேதத்தை மையப்படுத்தி போதிப்பதன் மூலம் தேவனை மகிமைப்படுத்துவதும் அவ்வாறு கற்று கொடுப்பதன் மூலம் விசுவாசிகளை தேவ பணியிலும், சமுதாயத்திலும், பணியிடத்திலும், ஊழியத்திற்கும், தலைமைத்துவத்திற்கும் உருவாக்குவது நம் தரிசனம் ஆகும். மேலும்,

பெருகிவரும் விசுவாசிகளை சத்தியத்தில் வளர்க்கும் மாபெரும் தேவையை சந்திப்பதற்காக அநேக விசுவாசிகளை ஊழியத்திற்கு பயிற்சி கொடுத்து உருவாக்குவது.

விசுவாசிகளுக்குள் மறைந்து கிடக்கும் தாலந்துகளை, திறமைகளை கண்டுபிடிக்க உதவி ஊழியத்திற்கு சிறந்த தலைவர்களாக உருவாக்குவது.

விசுவாசிகள் ஒவ்வொருவருமே ஊழியம் செய்ய வேண்டும் என்ற பாரத்தை கொடுத்து தேசத்தை இயேசுவுக்கு சொந்தமாக்குவது.

பணிபுரிவோருக்கும், விசுவாசிகளுக்கும் இறையியல் படிப்பை அவர்கள் வசிக்கும் இடத்திற்கே குறைந்த செலவிலேயே கிடைக்க செய்து சரீரமாகிய சபையை, சபை பாகுபாடில்லாமல் ஆரோக்கியமாக தேசமெங்கிலும் வளரச் செய்வது.

ஒரு ஆண்டிற்கு இரு பருவத்தேர்வு உண்டு. ஒரு பருவத்திற்கு 5 பாடங்கள். இதில் 1 பாடம் நடைமுறை ஊழியத்தை பற்றிய துணைப்பாடம் (இப்பாடம் தேர்வுக்கு கிடையாது). இதற்கு நீங்கள் ஒவ்வொரு பாடத்தின் முடிவில் நாங்கள் தரும் இரு தலைப்பில்  மூன்று பக்கங்களில் கட்டுரை எழுதி தரவேண்டும். பரீட்சைக்குரிய 4 பாடத்திற்கும் [Subjects] PDF பாடக்குறிப்புகளையும் ஒவ்வொரு பருவத்திற்கும் கல்லூரியே வழங்கும். வகுப்பு ஆரம்பித்ததிலிருந்து ஆறாவது மாதத்தில் பருவத்தேர்வு நடைபெறும். படிப்பின் முடிவில் தேர்ச்சியின் அடிப்படையில் பட்டமளிக்கப்படும். இந்த 5 பாடப்புத்தகங்கள் தவிர ஆவிக்குரிய வளர்ச்சிக்கான போதனைகள், ஊழிய நடைமுறை பயிற்சிகள் மற்றும் இறையியல் அடிப்படையிலான பிரசங்கங்கள், வேதாகமத்தை ஆழமாக அறிய பாடங்கள் கற்றுத்தர இருக்கிறோம்.

Certificate in Systematic Bible Studies

இது அடிப்படை இறையியல் கல்வி (Foundation Course) படிப்பாகும். எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும். 3 மாத படிப்பு. ஒவ்வொரு யூடியூப் ஆடியோ பாட இறுதியில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் எழுதி வைத்துக்கொண்டு அந்நோட்டை அனுப்பி வைக்க வேண்டும். அனைவருக்கும் இறையியலை அறிமுகப்படுத்தும் முயற்சியே இது. படிப்பின் முடிவில் C.S.B.Sசான்றிதழ் வழங்கப்படும். இப்படிப்பை நீங்கள் உங்கள் பகுதியில் நடத்துவதற்கு எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.

கல்வியாண்டுக் குறிப்பேடு

Academic Calendar

C.S.B.S

Diploma in Theology

Bachelor of Theology

Dip.TH படிப்பு

ஒராண்டு கால படிப்பு. இரண்டு பருவத்தேர்வு. கல்வித்தகுதி: C.S.B.S.

பாடங்களை வீட்டிலிருந்த படியே ஆன்லைனில் கேட்டு விட்டு இரு பருவத்தேர்வுகள் உங்கள் ஊரிலேயே எழுத வேண்டும். தேர்ச்சியின் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும்.

B.TH படிப்பு

மூன்றாண்டு படிப்பு. ஆறு பருவம்.
கல்வித்தகுதி: 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு NATA சான்றிதழ்.

Dip.TH அல்லது C.S.B.S (நமது பவுண்டேஷன் கோர்ஸ்) அல்லது ஊழிய அனுபவத்துடன் 8ம் வகுப்பு தேர்ச்சி. இவர்களுக்கு அதே பாடம் மற்றும் பயிற்சி. எங்களுடைய செமினரியின் சான்றிதழ் வழங்கப்படும். ஊழிய இயக்கங்களின் நன் மதிப்பை பெற்ற அங்கீகாரமான சான்றிதழ்.

மொத்தம் (30 பாடப்பிரிவுகள்) தேர்வு மதிப்பெண்கள்-100
பாடத்திற்கு – 60
ஆய்வுக்கட்டுரை – 30
நடைமுறை பயிற்சி மற்றும் ஒத்துழைப்பு – 10

Master of Divinity

M.Div. படிப்பு

இரு ஆண்டு படிப்பு. நான்கு பருவம். கல்வித்தகுதி: B.TH அல்லது ஏதாவதொரு அரசு பல்கலைக்கழக பட்டம்.
மொத்தம் (20 பாடப்பிரிவுகள்) தேர்வு மதிப்பெண்கள்-100
பாடத்திற்கு – 60
ஆய்வுக்கட்டுரை – 30
நடைமுறை பயிற்சி மற்றும் ஒத்துழைப்பு – 10

குறிப்பு

எழுத்துத் தேர்வு 60 மதிப்பெண்களுக்கு நடைபெறும். ஆய்வுக்கட்டுரைக்கு 30 மதிப்பெண்கள். மேலும் நீங்கள் இந்த படிப்பில் காட்டும் ஈடுபாடு, கிரமமான பதில், நடைமுறையாக செய்யும் களப்பணி(Field Work) போன்றவற்றிற்கு 10 மதிப்பெண்களும் தரப்படும். ஆக, நீங்கள் இந்த படிப்பில் மிகவும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறுவது எளிது.

PH.D

Ph.D படிப்பு

இரு ஆண்டுகள். குறிப்பிட்ட தலைப்பின் கீழ் ஆய்வு மேற்கொண்டு (Thesis) ஆய்வுக்கட்டுரை 350 பக்கத்திற்கு குறையாமல் எழுதி சமர்ப்பிக்க வேண்டும். நேர்த்தியான முறையில், சரியாக எழுதி சமர்ப்பிக்கப்பட்டதற்கு Ph.D பட்டம் பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும்.

கௌரவ டாக்டர் பட்டம் (Doctor of Divinity)

ஊழியத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த அறுவடையை கொண்டு வருவோருக்கு அதேபோல் தியாகமான சமூகசேவையுடன் ஊழியம் செய்வோர் மற்றும் மிகவும் பாடுகள் மத்தியில் ஊழியம் செய்வோர் போன்றோரை கனப்படுத்துவதற்காக நம் செமினரி வழங்கும் பட்டம் இது. இப்படிப்பட்ட தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி தேவையில்லை.

களப்பயிற்சி

Field Work

நம்முடைய இந்தப்படிப்பில் சேர்ந்த பின்னர் பிரசங்கம் செய்ததை பற்றிய குறிப்பெழுதி அனுப்ப வேண்டும்.

இப்பொழுது செய்ய ஆரம்பித்த கிராம ஊழியங்கள், தனித்தாள் ஊழியம் போன்றவை பற்றிய குறிப்புகள்.

இப்பொழுது ஆரம்பித்து செய்யும் வேத தியான ஜெபக்குழுக்கள் பற்றிய குறிப்புகள்

சமுதாய பணிகள் செய்ததை பற்றிய குறிப்பு

இந்த படிப்பில் சேர்ந்த பின்னர் புதிதாக செய்ய ஆரம்பித்த எந்த ஊழியமாயினும் அதைப் பற்றிய குறிப்புகள்.

மேலும் நம் இலவச படிப்பை பற்றி அறிய கீழே கிளிக் செய்க