கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதரிகளே,

 உங்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கும், இறையியல் படிப்பிற்கும் எங்களுடைய சீயோன் செமினரியை தேர்ந்தெடுத்ததற்காக உங்களுக்கு நன்றி!


 நம்முடைய படிப்பு பற்றிய அனைத்து விபரங்களையும் இங்கே தருகிறோம்:

படிப்பில் சேர:
 • கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை நிரப்பி தபாலில் எங்கள் அலுவலகத்திற்கு சீக்கிரத்தில் அனுப்பி வைக்க அன்புடன் வேண்டுகிறோம்.
 •  விண்ணப்பப்படிவத்தில் விலாசம் மற்றும் அனைத்து தகவல்களும் உள்ளன.
 •  விண்ணப்பப்பாரத்தோடு ரூ. 500/- சேர்க்கை கட்டணம் செலுத்தி எங்கள் அலுவலகத்திற்கு அனுப்பவும் .
கட்டண விபரம்:
 • மாதக்கட்டணம் ரூ 100
 • தேர்வுக்கட்டணம் ரூ 250 [6 மாதத்திற்கு ஒருமுறை]

 •  நீங்கள் விண்ணப்பப் படிவத்தை அனுப்பிய உடன் உங்களுக்கு பாடத்தை கேட்பதற்கு யூசர் நேம், பாஸ்வேர்ட் தரப்படும்.
 •  வீட்டில் இருந்து பாடங்களை கேட்க ஆரம்பிக்கலாம்.
 • இந்த வெப்சைட்டில் பாட புத்தகங்கள் உள்ளன. தேவையானால் பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.
 • ஆறாவது மாதத்தில் பரீட்சை நடைபெறும். உங்கள் ஊரிலேயே/ வீட்டிலேயே நீங்கள் இருந்து எழுதும் வண்ணம் கேள்வித்தாள் வாட்ஸப்பில் அனுப்பி வைக்கப்படும்.
 •  ஒரு சூப்பர்வைசர் தலைமையின் கீழ் நீங்கள் எழுதுவீர்கள்.
 •  இந்த சூப்பர்வைஸரை நீங்களே நியமித்து அவருடைய போன் நம்பரை விண்ணப்ப படிவத்தில் எழுதி தர வேண்டும்.

 • *உங்களுக்குத் தெரியுமா?*

   அபுதாபியில் ஊழியர்கள்/ பாடல் பாடுகிறவர்கள்/ சபையில் மைக் பிடித்து பேசுகிறவர்கள் ஒவ்வொருவரும் B.Th/ M.Div படித்திருக்க வேண்டும் என்ற கடுமையான சட்டம் ஏற்றப்பட்டுள்ளது.
  அந்த நாட்டிலிருந்து நம்முடைய ஆன்லைன் படிப்பை படிக்கிறவர்கள் உண்டு.
   ஆகவே இக்கால சூழ்நிலையை புரிந்துகொண்டு தேவ  ஜனங்களும், ஊழியர்களும்  வீட்டிலிருந்து படிக்கும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

  ரூ50/- மாதக்கட்டணத்தில்  B.Th/ M.Div:

                       [குழுவாக படிப்போருக்கு]
 நீங்கள் ஒரு குழுவாய் சேர்ந்து படித்தால் ரூ50/- மாதக் கட்டணத்தில் படிக்கலாம். குறைந்தது 20 பேர்களாவது படிக்கவேண்டும்.
இல்லாவிட்டால்  குழு மூலமாக ரூ1000/- மாத காணிக்கை செலுத்தி நீங்கள் சிலராக சேர்ந்து படிக்கலாம்.
இவ்வாறு குழுவாக படிப்பது மிகவும் நல்லது. நாங்கள் உங்களுக்கென்று Seminar நடத்தமுடியும். மட்டுமல்ல Exam center வைத்து நடத்தலாம்.

B.TH படிப்பு

மூன்றாண்டு படிப்பு. ஆறு பருவம்.
கல்வித்தகுதி: 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு NATA சான்றிதழ்.

12 ம் வகுப்பு படிக்காதவர்களுக்கு:

 1. Dip.TH அல்லது C.S.B.S (நமது பவுண்டேஷன் கோர்ஸ்)
 2. அல்லது ஊழிய அனுபவத்துடன் 8ம் வகுப்பு தேர்ச்சி.
 3. இவர்களுக்கு அதே பாடம் மற்றும் பயிற்சிதான்.ஆனால்  எங்களுடைய செமினரியின் சான்றிதழ் வழங்கப்படும். ஊழிய இயக்கங்களின் நன் மதிப்பை பெற்ற அங்கீகாரமான சான்றிதழ்.

மொத்தம் (30 பாடப்பிரிவுகள்)

தேர்வு மதிப்பெண்கள்-100

பாடத்திற்கு – 60
ஆய்வுக்கட்டுரை – 30
நடைமுறை பயிற்சி மற்றும் ஒத்துழைப்பு – 10

M.Div:

இரு ஆண்டு படிப்பு. நான்கு பருவம்.

கல்வித்தகுதி: B.TH அல்லது ஏதாவதொரு அரசு பல்கலைக்கழக பட்டம்.

மொத்தம் (20 பாடப்பிரிவுகள்)

தேர்வு மதிப்பெண்கள்-100
பாடத்திற்கு – 60
ஆய்வுக்கட்டுரை – 30
நடைமுறை பயிற்சி மற்றும் ஒத்துழைப்பு – 10

குறிப்பு

எழுத்துத் தேர்வு 60 மதிப்பெண்களுக்கு நடைபெறும். ஆய்வுக்கட்டுரைக்கு 30 மதிப்பெண்கள். மேலும் நீங்கள் இந்த படிப்பில் காட்டும் ஈடுபாடு, கிரமமான பதில், நடைமுறையாக செய்யும் களப்பணி(Field Work) போன்றவற்றிற்கு 10 மதிப்பெண்களும் தரப்படும். ஆக, நீங்கள் இந்த படிப்பில் மிகவும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறுவது எளிது.


கீழேயுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் [Download] செய்துகொண்டு ப்ரிண்ட் செய்து கொள்ளவும். பிறகு நிரப்பி இந்த விண்ணப்ப படிவத்திலுள்ள விலாசத்திற்கு தபாலில் அனுப்பவும்.  வெளிதேசத்திலுள்ளோர் இமெயிலில் அனுப்பவும்.

நம் செமினரிக்கு கட்டணம் செலுத்த:

நீங்கள் கீழ்கண்ட Google Pay QR code ஐ செல்லில் ஸ்கன் செய்து கட்டணத்தை நம் அலுவலகத்திற்கு நேரடியாக செலுத்தமுடியும். இந்த QR CodeGoogle Pay, PAYTM, Amazon, PhonePe,IMobile, BHIM,UPI போன்ற app மூலமாகவும் ஸ்கன் செய்து அனுப்பலாம்.

அல்லது நீங்கள் Google Pay app மூலமாக அனுப்பலாம். உங்கள் Google Pay app ல் +91 9080736684 என்ற எண்ணில் Zion Seminary என்ற account ற்கு அனுப்பிவிடலாம்.

அல்லது கீழ்கண்ட Bank account ற்கும் அனுப்பிவைக்கலாம்:

 T.RAMESH JOSHUA, INDIAN BANK, BRANCH: PALAYAMKOTTAI, CODE:352 ACCOUNT NUMBER: 777513101. IFSC Code IDIB000P008

எதன் வழியாக அனுப்பினாலும் அனுப்பிய பிறகு எங்களுக்கு தெரிவிக்கவும்.

For New GOOGLE ACCOUNT:

உங்களுக்கு ஒருவேளை Google Pay ல் இதுவரை account இல்லையென்றால் உடனே ஆரம்பியுங்கள்.  அதை எப்படி செய்யவேண்டும் என்பதை அறிய கீழ்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோவை பார்த்து அப்படியே செய்யுங்கள்.

வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க

நீங்கள் கீழ்கண்ட  லிங்கை கிளிக் செய்தும் Google pay app ஐ உங்கள் செல்லில் Download செய்து கொள்ளலாம்:

Google pay app  Download செய்ய இதில் கிளிக் செய்க

இன்னும் அதிக விபரம் தேவையா?

அழையுங்கள் அல்லது வாட்ஸப் செய்யுங்கள்:

+91 9080736684