Our Vision and Mission & ministries

அறிமுகம்:

கர்த்தருடைய பெரிதான கிருபையினால் 30 ஆண்டுகளாக விடுவிக்கும், போதிக்கும் ஊழியத்தை செய்து வந்த சீயோன் சுவிசேஷஜெப ஐக்கியம் [Regd] தேவன் தந்த தரிசனம் மற்றும் பாரத்தினாலும், இக்காலத்தின் சுவிசேஷ அவசரத்தினாலும் இந்த மாபெரும் மிஷனெரி ஊழியத்தை செய்ய துவங்கியுள்ளது. இது அநேக சபைகளின், ஊழியங்களின் கூட்டு முயற்சியாகும். இந்த எதிர்ப்பான காலகட்டத்தில் திறவுண்ட வாசல்கள் அடைபடும் முன்னர் இக்கால கட்டத்திற்கேற்ப புதிய ஊழிய அணுகுமுறையில் செயல்பட்டு திரள் கூட்ட ஜனத்தை கர்த்தருக்கென்று  ஆதாயப்படுத்த ஒன்றிணைந்து வருவோம்.

தரிசனம்:

  • வட, தென் இந்திய சுதேச மிஷனெரிகளுக்கு பயிற்சியும், உதவியுமளித்து ஆத்தும அறுவடையை துரிதப்படுத்துவது
  •  வேலையோடு ஊழியம் செய்யும் அநேக டென்ட் மேக்கர்களை [Tent Makers] உருவாக்கி மாபெரும் அறுவடைக்கு வித்திடுவது
  • இந்த எதிர்ப்பான காலகட்டத்திற்கேற்ப சபை  மற்றும் ஊழியத்தை பாதுகாப்புடன் நடத்திச் செல்ல அனைத்து சட்டபூர்வமான உதவி மற்றும் பயிற்சி அளிப்பது
  • அநேக இலவச வேதாகம கல்லூரிகளை தேசமெங்கும் ஏற்படுத்தி ஆரோக்கியமான விசுவாசிகளை & ஊழியர்களை உருவாக்குவது
  • ஏராளமான சமூக சேவைகள் மூலம் அநேக இடங்களில் இயேசுவை அறிமுகம் செய்வது
  • ஐந்து விதமான ஊழியங்களை செய்யும் அடுத்த கட்ட தலைவர்கள் அநேகரை சபையில் உருவாக்குவது.

நமது ஊழியங்கள்:

1. சுதேச மிஷனெரிகளின் ஊழிய மேம்பாடு:

இந்தியாவெங்கிலும் தேவ அழைப்பு பெற்று ஏற்கனவே மிஷனெரி பணித்தளத்தில் இருப்போருக்கு ஜெப உதவி, பயிற்சி மற்றும்தேவையான உதவிகளைச் செய்து இன்னும் ஆத்தும அறுவடை பணியை விரிவாக,
துரிதமாக செய்ய உதவுகிறோம்.

நமது தற்போதைய பணித்தளங்கள்:

திருச்சி முசிறித்தாலுக்காவிலுள்ள  கிராமங்கள், ஒரிசாவிலுள்ள கோராபுட் மாவட்டத்தில் 13 வகையான பழங்குடி இன மக்கள் மத்தியில்.

2. சபை பாதுகாப்பு பணி:

இன்று சபையானது எதிர்ப்பு, உபத்திரவம், கள்ள உபதேசம், பிரிவினை போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே சபையானது எதிர்ப்பாளர்களால்  பாதிக்கப்படாமல் இருக்க சட்ட உதவி ஆலோசனை, சபையை சட்டப்படியாக பதிந்து நிர்வகிப்பது, ஊழியர் அங்கீகாரம் மற்றும் உரிமம் போன்றவற்றை வழங்கி முறைப்படியாக நடத்திச் செல்ல வழிகாட்டுகிறோம். மட்டுமல்ல எதிர்ப்பாளர்களால் பாதிக்கப்பட்ட சபை மற்றும் ஊழியத்திற்கு இயன்ற உதவியை செய்து மீண்டும் ஊழியத்தை தொடர கைகொடுக்கிறோம்.

சபையை ஆரோக்கியமான உபதேசத்தில் வளர்ப்பதற்காக ஏராளமான முகாம்கள் மற்றும் இலவச வேதாகமக்கல்லூரி வகுப்புகளை அவர்களிடத்திற்கே சென்று நடத்துகிறோம்.

3. டெண்ட் மேக்கர்ஸ் பயிற்சி: [Tent Makers Training]

அப். பவுல் கூடார தொழில் செய்து கொண்டு கலாத்தியா, கொரிந்து, தெசலோனிக்கே மற்றும் எபேசு பட்டணங்களில் சுவிசேஷம் அறிவித்ததை நாம் புதிய ஏற்பாட்டில் பார்க்கிறோம். இதுபோன்று பணி புரிந்து கொண்டே தேவனுடைய பணியை செய்யும் திரளான ஊழியர்களை உருவாக்க பயிற்சி முகாம்களை நடத்துகிறோம். இவர்கள் மூலமாகவும் சுவிசேஷத்தின் மாபெரும் தேவையை சந்திக்க முயற்சி எடுக்கிறோம்.

4 சமூகப்பணி மூலம் சுவிசேஷம்:

இன்றைய காலகட்டத்தில் நற்பணிகள் மூலமே சுவிசேஷத்தை எதிர்ப்பின்றி எளிதாகவும்,ஆழமாகவும் அறிவிக்கமுடியும். ஆகவே இந்தியாவில் உள்ள அநேக கிராமங்களில் தன்னார்வமாக சமூகபணி செய்ய வருகிறவர்களை குழுவாக ஏற்படுத்தி ‘Reborn club’ களை ஆரம்பிக்க தரிசனத்தோடு செயல்படுகிறோம்.

இதன் மூலம்:

1. இலவச மருத்துவ முகாம்கள்

2. அனாதைகள், திக்கற்ற முதியோர்கள் போன்றோருக்கு அவர்களிருக்கும் இடத்திற்கே சென்று உணவளித்தல்

3. இலவச டியூஷன், தையல் மற்றும் கணினி பயிற்சி
வகுப்புகள்

4. மது மறுவாழ்வு மையம்

5. ஆலோசனை மையங்கள் போன்றவற்றை ஏற்படுத்தி
அதன் வழியாகவும் சுவிசேஷம் அறிவிக்கிறோம்.

5 வேதாகமக் கல்லூரிகள் மற்றும் இதர ஊழியங்கள்:

தேவனுடைய சபைகளின் வளர்ச்சிக்காக நாம் வேதாகமக் கல்லூரிவகுப்புகளை ஆன்லைனிலும் மற்றும் நேரடி வகுப்புகளாகவும் நடத்துகிறோம். திருநெல்வேலி, கொடைக்கானல்,திருச்சி, சென்னை நகரங்களிலும் இலங்கையில் உள்ள வவுனியா, அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும்
வகுப்புகள் நடைபெறுகின்றன. சீக்கிரத்தில் வட இந்தியாவிலுள்ள நமது மிஷனெரி பணித்தளங்களில் அநேக இலவசவேதாகமக் கல்லூரிகளையும் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

இது தவிர குடும்ப செமினார்கள், ஊழியர் பயிற்சி முகாம்கள், ஜெப ஐக்கிய கூடுகைகள்,கன்வென்சன் கூட்டங்கள், சிறுவர் & வாலிபர் ஊழியங்கள் போன்றவற்றின் மூலம் சபையின் எழுப்புதலுக்கான பணிகளும் நடைபெறுகின்றன.

இந்த ஊழியத்தில் உங்களது பங்களிப்பு…

இந்த மாபெரும் ஊழியத்தில் நீங்களும் எங்களோடுஇணைந்து பணியாற்ற அன்புடன்
அழைக்கிறோம். நீங்கள் கீழ்கண்ட காரியங்களில் சிலவற்றில் எங்களோடு இணைந்து ஊழியம்
செய்ய எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.

உங்கள் உள்ளத்தில் கீழ்கண்ட எண்ணத்தை தேவன் தருவாரானால் எங்களோடு அந்த அர்ப்பணிப்பை பகிர்ந்து  கொண்டு தேவனுக்காக  செயல்பட முன் வாரீர்.

நீங்கள் இதில் தன்னார்வ ஊழிய தலைவராக இந்த மாபெரும் தரிசனத்தோடு இணைந்து தேவ ஊழியத்தை நிறைவேற்றலாம்.

நீங்கள் இந்த ஊழியத்திற்காக குறைந்தது இரண்டு பேர்கள்  கொண்ட  ஜெபக்குழு அமைத்து ஜெபிக்கலாம். ஜெபக்குறிப்பு நாங்கள் அனுப்பி தருகிறோம்.

இந்த தேவை மிகுந்த ஊழியத்திற்காக மற்றவர்களிடம் பணம் பிரித்துத்தந்து இந்த ஊழியத்தை தாங்கலாம்.

நீங்களும் கர்த்தர் ஏவினால் மாதந்தோறும் ரூ………… காணிக்கையாக தந்து இவ்வூழியத்தை தாங்கலாம்.

ஒரு மிஷனெரிக்கான மாத உதவித்தொகை ரூ 3000த்தில் உங்களது மாத பங்கு ரூ……… கொடுத்து தாங்கலாம்.

ஒரு ஆலயத்தைக்கட்டி தர முன் வரலாம்.

நீங்கள் ஒருவேளை மிஷனெரியாக செல்ல விரும்புவீர்களானால் நாங்கள் அனுப்பிவைக்க ஏற்பாடு செய்வோம்.

வேலையோடு ஊழியம் செய்யும் டெண்ட் மேக்கராக நீங்கள் எங்களோடு இணைந்து ஊழியம் செய்யலாம்.

நமது இந்த இலவச வேதாகமக் கல்லூரி பயிற்சியை
உங்களது சபையில்/ஊழியத்தில் நடத்தலாம். அது பற்றி எங்களிடம் தெரிவியுங்கள்.

நீங்கள் நமது செமினரியில் B.Th/M.Div  சேர்ந்து நேரடியாக அல்லது ஆன்லைனில் படிக்கலாம்.

நீங்கள் சமூக சேவைக்கான பயிற்சியை எங்களிடம் பெற்று உங்கள் ஊரில் Reborn Club ஐ ஆரம்பிக்கலாம்.

உங்களின் ஊழிய அழைப்பு மற்றும் தாலந்துகளை இந்த ஊழியத்தில் பயன்படுத்தலாம். நங்கள் அதற்கு வாய்ப்பு தர தயாராக இருக்கிறோம்.உங்களது தாலந்துகளை எங்களுக்கு தெரியப்படுத்தவும்.

குறிப்பு:

மேலேயுள்ள விதமாகவும், இன்னும் நீங்கள் தேவ வெளிப்பாட்டினால் பெறும் வழிநடத்துதலின்படியேயும் எங்களோடு இணைந்து செயல்பட அன்புடன் அழைக்கிறோம்.