கிறிஸ்துவுக்குள் அன்பான மாணவச்செல்வங்களே,
உங்கள் அனைவரையும் நமது செமினரிக்கு வாழ்த்தி வரவேற்கிறோம்.
உங்களுடைய இறையியல் படிப்பிற்க்கும், ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் எங்களை தேர்ந்தெடுத்ததற்காக மிக்க நன்றி!
அநேக இறையியல் பாடங்களிருந்தாலும் உங்களது ஆவிக்குரிய வாழ்விற்கும், வேத அறிவிற்கும் மற்றும் ஊழியத்திற்கும் மிகவும் பிரயோஜனமான பாடங்களை நீங்கள் நம்மிடம் பயில இருக்கின்றீர்கள்.
ஆன்லைனில் படிக்கிற உங்கள் சூழ்நிலைகளை நாங்கள் கருத்தில் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு ஒருவேளை இறையியல் படிப்பிற்காக நூலக [Library] வசதியோ, இறையியல் புத்தகங்களை வாங்கி படிக்கவோ, நாள் முழுவதும் வகுப்பில் இருந்து படிக்கும் வாய்ப்போ இல்லாதிருக்கிறது. இந்த ஆன்லைன் படிப்பு புதியதொரு அனுபவமாக உங்களுக்கு இருக்கப் போகிறது.
நாங்கள் உங்களுக்கு மிகவும் தேவையான இறையியல் பாடங்களை அதன் கருத்து மாறாமல் மிகவும் எளிமைப்படுத்தி தந்திருக்கிறோம். நீங்கள் வீட்டிலிருந்து எளிமையாக படிக்க இயலும்.
இந்த பாடப்புத்தகங்களையும் தவிர ஆவிக்குரிய வளர்ச்சி, நடைமுறை ஊழிய பயிற்சிகள் மற்றும் இறையியல் அடிப்படையிலான பிரசங்கங்கள், வேதாகமத்தை முற்றிலும் ஆழமாக விளங்கிகொள்ளவும் கற்றுத்தர இருக்கிறோம். ஆக இறையியலை மட்டுமல்ல வேதத்தையும் கற்றுதருவோம். இது மற்ற எந்த இறையியல் கல்லூரியிலும் இல்லாத நம்முடைய ஒரு சிறப்பு தன்மை.
நீங்கள் செய்ய வேண்டியவை:
- பாடத்தை ஆடியோவில் கேட்டு குறிப்பு எடுப்பதற்கும், பதில்களை எழுதிக்கொள்ளவும் நோட்புக் ஒன்று போட்டுகொள்ளுங்கள்.
- தினமும் உங்களுக்கு வசதியான ஒரு மணி நேரத்தை இதற்கென ஒதுக்கி கொள்ள அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
- பாடத்தை கேட்கும் போது நம் பாடப்புத்தகத்தையும் கையில் வைத்துகொள்ளுங்கள். புரிந்துகொண்டால் போதும். தனியாக பரீட்சைக்காக படிக்கதேவையில்லை.
- நாங்கள் உங்களுக்கு பரீட்சைக்காகவோ, பட்டத்திற்காகவோ மட்டும் இந்த படிப்பை நடத்தாமல் ஊழிய நோக்கத்தோடு செய்வதால் சிறந்த தரமான வகையில் அனைத்தையும் செய்கிறோம். முழுநேரமாக [Regular] கல்லூரியில் படிப்பதற்க்கிணையாக தரமாக கற்றுத்தர முயற்சிக்கின்ற எங்களோடு நீங்கள் முழு ஒத்துழைப்பை தந்தால் போதும். இந்த படிப்பின் முடிவில் ஒரு சிறந்த விசுவாசியாக, சிறந்த கனியுள்ள ஊழியராக உருவாகுவது உறுதி.
உங்களை கர்த்தரின் உதவியோடு நாங்கள் உருவாக்குகிறோம். இது நிச்சயம்!