Our Graduated Students List


“Our Zion Seminary senate body is proud to offer certification under the accreditation of NATA, Bangalore, ensuring full compliance with their rigorous standards and professional guidance.”

  1. Graduates – Kanyakumari Convocation, 26 June 2026

Declaration:
“This credential is an ecclesiastical and theological award issued by Zion Seminary for religious, ministerial, and spiritual development purposes. Zion Seminary operates as a registered private body,  autonomous institution and is not accredited by the University Grants Commission (UGC) or any government educational authority. This credential serves the Theological academic and spiritual requirements of the Christian religious community and makes no claim of equivalence to secular academic degrees recognized by the government.”

Our Zion Seminary Journal, June - August

Toggle Content goes here

Certificate in Systematic Bible Studies - பாடங்கள்

1. நம்முடைய பைபிளின் அமைப்பு & அது மற்ற புத்தகங்களிலிருந்து எவ்விதம் வேறுபடுகிறது?

2. நம்முடைய பைபிளில் 66 புத்தகங்கள் எதன் அடிப்படையில் சேர்க்கப்பட்டது?

3. பழைய ஏற்பாட்டை 12 சிறிய தலைப்புகளில் புரிந்து கொள்வோம்: முதல் 6 தலைப்புகள்

4. பழைய ஏற்பாட்டை 12 சிறிய தலைப்புகளில் புரிந்து கொள்வோம்: 7 முதல் 12 வரையுள்ள தலைப்புகள்

5.1 புதிய ஏற்பாட்டை 10 சிறிய தலைப்புகளில் புரிந்து கொள்வோம்:1 முதல் 5 வரையுள்ள தலைப்புகள்

5.2] புதிய ஏற்பாட்டை 10 சிறிய தலைப்புகளில் புரிந்து கொள்வோம்: 5 முதல் 10 வரையுள்ள தலைப்புகள்

6.அபோக்கிரிபா என்றால் என்ன? அந்தப் புத்தகங்கள் ஏன் வேதத்தோடு சேர்க்காமல் தள்ளப்பட்டது?

7.சூடோபிக்ராஃபா என்றால் என்ன? அந்தப் புத்தகங்கள் ஏன் வேதத்தோடு சேர்க்காமல் தள்ளப்பட்டது?

8. வேதத்தை வாசிக்கும் போது நாம் என்னென்ன காரியங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

I] கால இடைவெளி

II] கலாச்சார இடைவெளி

III] மொழி இடைவெளி

IV] சூழலை Context கவனியுங்கள்:
உடனடி சூழல்: முன்னாடி-பின்னாடி வசனங்கள் என்ன சொல்லுது?
– புத்தக சூழல்: அந்த புத்தகம் யாருக்கு, ஏன் எழுதப்பட்டது?
– வேதாகம சூழல்: முழு வேதத்தோடு முரண்படுதா? வேதம் வேதத்தை விளக்கும்.

V] வரலாற்று & கலாச்சார பின்னணி
அந்த காலத்து பழக்கம், அரசியல், மொழி நடை என்ன? உதா: “ஒட்டகம் ஊசி காதில்” – அது எருசலேமின் ஒரு சின்ன வாசல்.

VI] இலக்கணம் & சொல் அர்த்தம்
மூல மொழி எபிரேயம்/கிரேக்கம்-ல அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்?
உதா: “அன்பு” – Agape, Phileo, Eros வித்தியாசம் உண்டு.

VII] இலக்கிய வகையை புரிந்துகொள்ளுங்கள்
வேதத்தில் பல வகை உண்டு. ஒரே மாதிரி வியாக்கியானம் பண்ண கூடாது.
வகை எப்படி வாசிக்கணும் உதாரணம்
*சரித்திரம்* நடந்த சம்பவமா எடுக்கணும் யோசுவா, அப்
*கவிதை* உணர்ச்சி, உருவகம் சங்கீதம், நீதி
*தீர்க்கதரிசனம்* அடையாளம், நிறைவேறுதல் ஏசாயா, வெளி
*நிருபம்* நேரடி போதனை, கட்டளை ரோமர், எபேசியர்
*உவமை* ஒரு முக்கிய பாடம் லூக்கா 15

VIII] வேதம் வேதத்தை விளக்கும் – Scripture interprets Scripture
தெளிவான வசனம் தெளிவில்லாத வசனத்தை விளக்கும். வேதம் தனக்குத்தானே முரண்படாது. ஏசா 28:10

IX] சரியான பயன்பாடு Application
முதலில்: அன்று அவர்களுக்கு என்ன அர்த்தம்?
பிறகு: இன்று நமக்கு என்ன பாடம்?
வசனத்தை இழுத்து நம்ம இஷ்டத்துக்கு அர்த்தம் கொடுக்க கூடாது. 2 பேது 1:20

X] தாழ்மையும் சபை சரித்திரமும்
“நான் மட்டும் தான் சரி” என்று நினைக்காமல், 2000 வருஷ திருச்சபை பிதாக்கள் என்ன சொன்னார்கள் என கவனிப்பது  நீதி 11:14

9. வேதத்தை நாம் வாசிக்கும் போது தவிர்க்க வேண்டிய 3 காரியங்கள்:
1. Eisegesis: நம்ம கருத்தை வேதத்துக்குள்ள திணிக்கிறது
2. Proof-texting: ஒரு வசனத்தை மட்டும் பிடிச்சு கோட்பாடு உருவாக்குறது
3. Allegorizing: எல்லாத்துக்கும் ஆவிக்குரிய அர்த்தம் தேடுறது

10. வேதத்தை நாம் 9 முறைகளில் பயன்படுத்த வழிகள்

Archives:

June,2026

From My Desk...

நம்முடைய பைபிள் காலேஜ் கல்லூரி மாணவர்களுக்காக டைரக்டரின் டெஸ்கிலிருந்து சில வார்த்தைகள்:

அருமையான மாணவ மாணவிகளே…

உங்களை இந்த கடிதம் மூலமாக சந்திப்பதிலே மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஜூன் மாதம் உங்களுக்கு ஆசீர்வாதமாய் இருப்பதாக.

இந்த ஜூன் மாதத்திற்காக கர்த்தர் தருகிற அருமையான வாக்குத்தத்தம்:

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், திகையாதே, நான் உன் தேவன், நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன், என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
ஏசாயா 41:10

இந்த மாதத்தில் கர்த்தர் உங்களோடு கூட இருந்து உங்களை பலப்படுத்தி சகாயம் அதாவது உதவி பண்ண போகிறார் .அவருடைய தாங்குதல் இந்த மாதத்தில் விசேஷமாக இருக்கப் போவதினால் நீங்கள் தள்ளாட போவதில்லை

அன்பானவர்களே, நீங்கள் இந்த மாதத்திலே நம்முடைய பாடங்களை தவறாமல் தினமும் ஆடியோவை கேட்டு தினமும் புத்தகத்தை படித்து மாத இறுதியில் நடைபெறும் தேர்வை சிறப்பாக எழுத ஆயத்தப்படுங்கள். . கர்த்தருடைய உதவி ஒத்தாசை உங்களுக்கு இருக்கும்.

மாத கட்டணத்தையும் அந்தந்த மாதத்தில் செலுத்தி விட மறவாதீர்கள் …பிறகு சேர்த்து கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம் என்று நினைக்கும் பொழுது இறுதியில் அதிக தொகையாய் வரும் பொழுது படிப்பை முழுமையாய் முடித்து வெற்றி பெற முடியாமல் அனேகர் கஷ்டப்படுகிறதை பார்க்கிறோம். ஆகவே அந்தந்த மாதம் கட்டணத்தை செலுத்தி விட மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.

அது நாங்கள் மாதந்தோரும் செய்கிற ஊழியங்களுக்கு & நம்முடைய அலுவலக பணிகளுக்கு நீங்கள் செலுத்துகின்ற காணிக்கையாக எண்ணி மனப்பூர்வமாய் செய்யுங்கள்.

நாங்கள் உங்களுக்காக அடிக்கடி ஜெபிக்கிறோம்… நீங்கள் எங்களுக்காகவும் வருகின்ற 25 ,26 ஆம் தேதிகளில் கன்னியாகுமரியில் இருக்கின்ற பட்டமளிப்பு விழா சிறப்பாய் நடைபெறவும் ஜெபித்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் விசேஷித்தவிதமாய் ஆசீர்வாதமாய் அநேகருக்கு காணப்பட போகிறீர்கள்

தேவனுக்கே மகிமை உண்டாவதாக

உங்கள் அன்பு
டைரக்டர் மற்றும்
சீயோன் செமினரி டீம்